தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் மீரான்குளம் கிராமத்திற்கு உட்பட்ட பெருமாள்குளத்திற்கு நீண்ட காலமாக பேருந்து வசதி இல்லாமல் இருந்தது.
பேருந்து வசதி கோரி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டதன் விளைவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஸ்ரீவைகுண்டம் பணிமனை இருந்து இயக்கப்படும் தடம் எண் 70ஏ பேருந்து பேய்க்குளத்தில் இருந்து மீரான்குளம் செல்லும் போது சாலைப்புதூரிலிருந்து பெருமாள்குளம், பெருமாள்குளம் காலனி வழியாக மீரான்குளத்திற்கு சென்று மீண்டும் அதே வழியில் பேய்குளத்திற்கு காலையில மாலையிலும் இயக்கப்பட்டு வந்தது

இதே வழித்தடத்தில் தனியார் பேருந்தும் இயக்கப்பட்டது.
இந்த வழித்தடத்தில் உள்ள பாலம் சேதமடைந்த காரணத்தினாலும், சாலை பழுது காரணமாகவும், மேற்படி பேருந்துகள் சில மாதங்களாக நேர் வழியில் இயக்கப்பட்டன
தற்போது வழித்தடத்தில் உள்ள பாலங்கள் புதிதாக கட்டப்படும், சாலை புதுப்பிக்கப்பட்ட புதிய சாலை அமைக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், பெருமாள்குளம் வழியாக இயக்கப்பட்ட பேருந்துகள், இன்னும் பெருமாள்குளம் வழியாக இயக்கப்படாமல் நேர் வழியாக இயக்கப்படுகின்றன

இனிய பெருமாள்குளம், பெருமாள்குளம் காலனி பொதுமக்கள் நலன் கருதி நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
