திசையன்விளையை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (வயது 46). இவர் சாத்தான்குளத்தில் உள்ள கல்வியியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தார்.

திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் ஊர் அருகே வந்த போது திசையன்விளையைச் சேர்ந்த ஜெய்சன் மற்றும் கரன் ஆகியோர் வந்த பைக்கும் எதிர்பாராமல் நேர் எதிரே மோதியது
சம்பவ இடத்தில் லிவிங்ஸ்டன் மற்றும் ஜெய்சன் ஆகியோர் பலியாகினர்.

படுகாயம் அடைந்த கரன் என்பவரை அங்கு உள்ளவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இது குறித்து திசையன்விளை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.