சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி நல்லூர் இசக்கியம்மன் கோவிலில் கொடை விழா நடைபெறுவதால் அப்பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் ஒலிப்பெருக்கி கட்டுவதற்காக சாஸ்தாவில்லூர் கிராமம் செளக்கியபுரம் ஊரைச் சேர்ந்த ஜோசப் என்பவரது 27 வயது மகன் செல்வன் தாவீது என்பவர் ஏறியபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அங்குள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வாகனத்தில் கொண்டு செல்லும் பொழுது செல்லும் வழியிலே பலியானார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக தட்டார்மடம் காவல்துறையினரால் விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்று ஒரே நாளில் சாத்தான்குளம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் இருவர் மின்சாரம் தாக்கி பலியானது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது