சாத்தான்குளத்தில் நேற்று இரவு 10 மணியளவில் சந்துரு என்ற வாலிபர் அறிவாளால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்
சந்துரு வெட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த சாத்தான்குளம் காவல்துறையினர், கொலை நடைபெற்று 12 மன்றத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்தனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த மரிய ஜோசப் மகன் கிங்ஸ்டன் ஜெயசிங், கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த ரெங்கசாமி மகன் கோபால், தட்டார்மடம் ரஸ்தா தெருவைச் சேர்ந்த பால்பாண்டி மகன் மகாராஜன், தச்சமொழி தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் மகாலிங்கம், மேலசாத்தான்குளத்தை சேர்ந்த லிங்கத்துரை ஆகியோர் சேர்ந்து கொலை செய்தனர் என்பதனை கண்டுபிடித்த சாத்தான்குளம் காவல்துறையினர், விரைவாக செயல்பட்டு குற்றவாளிகள் கிங்ஸ்டன் ஜெயசிங், மகாராஜன் ஆகிய இருவரை கைது செய்தனர். இதர குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கொலை நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்த காவல்துறையினரை பொதுமக்களும் வியாபாரிகளும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர்
பா. ஜான்சன் பொன்சேகர், புன்னகை தேசம் நிருபர்

