ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நேற்று தாலுகா அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு, ஸ்ரீவைகுண்டம் வட்ட செயலாளர் சற்குணம் தலைமை வகித்தார். தலைவர் கருப்பசாமி, துணைத்தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொருளாளர் விஜயமூர்த்தி, வட்ட பொருளாளர் தாமரைச்செல்வி ஆகியோர் போராட்டம் குறித்து எடுத்துரைத்தனர்.
இதில், உறுப்பினர்கள் வைகுண்டம், வள்ளியம்மாள், பாண்டி, பேச்சியம்மாள், கார்த்திக், மயில், சோமசுந்தரி, லெட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர்