சாத்தான்குளத்திற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் அவர்கள் உங்கள் ஊரில் உங்களை தேடி முகாமில் கலந்து கொண்ட போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்திற்கு இரவு நேர இயக்க வேண்டும் என உத்தரவிட்டார்
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இரவு நேரத்தில் பழைய பேருந்து நிலையம் வரை பேருந்துகளை இயக்க மறுத்து வருகின்றனர்
சாத்தான்குளத்திற்கு இரவு 12 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து வந்து சேரும் பேருந்து, பழைய பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை.
புதிய பேருந்து நிலையத்திலேயே பயணிகளை இறக்கி விட்டுச் சென்றுவிடுகிறது. இதனால் இரவு 12 மணிக்கு பெண்கள் மற்றும் கைக் குழந்தைகளுடன் வரும் பயணிகள் மிகுந்த அச்சத்துடன் வரவேண்டிய நிலை உள்ளது.
முன்பு இருந்தது போல் இரவு சாத்தான்குளத்திற்கு வரும் கடைசி பேருந்தை பழைய பேருந்து நிலையம் வரை வரை இயக்க வேண்டும் என்ற மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவை போக்குவரத்து அலுவலர்கள் கண்டுக்காமல் உள்ளனர்
இது பற்றி டிரைவரிடம் கேட்டால் அவர்கள் எங்களுக்கு போக்குவரத்து நிர்வாகம் அப்படி எந்த உத்தரவும் தரவில்லை எனவே நாங்கள் இயக்க முடியாது என கூறுகின்றனர்.
மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவினை செயல்படுத்தாத அரசு போக்குவரத்துறையினர் மீது ஒழுஙகு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் வரை இரவு நேரங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

