Sun. Jan 18th, 2026

சாத்தான்குளம் நூலகத்தில் குடியரசு தின விழா!

சாத்தான்குளம் இராம கோபால கிருஷ்ணர் அரசுக் கிளை நூலகத்தில் 76 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

கொடியேற்று விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் ஓ சு நடராசன் தலைமை வகித்தார். நூலகர் இசக்கியம்மாள் வரவேற்றார்.

இவ்விழாவில் மருத்துவர் ஏ கே ராய் ஓய்வு பெற்ற ஆசிரியர் மகா பால் துரை தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பிரேம்குமார் கிளை நூலகர்கள் சுப்ரமணியன், இராஜபிரபா, நூலக உதவியாளர் மைக்கேல் ராஜா ,கனகமுத்து, யோகா பயிற்றுநர் இராஜலட்சுமிஆசிரியை யோகா ஆசிரியை கமலம் மற்றும் வாசகர் வட்ட நிர்வாகிகள் வாசகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

நல் நூலகர் விருது பெற்ற அன்னாள் ஜெயந்தி நன்றி கூறினார்.
அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

Related Post