Sun. Jan 18th, 2026

நாசரேத்தில் தேசிய வாக்காளர்  தின விழிப்புணர்வு பேரணி

நாசரேத்தில் நடந்த தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை தாசில்தார் செல்வகுமார் தொடங்கி வைத்தார். 

நாசரேத்  ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட துறை சார்பாக  தேசிய  வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவ_ மாணவிகள்  வாக்களிப்பதின் அவசியம் குறித்து மனித சங்கிலி  விழிப்புணர்வு பேரணி  நடந்தது. 

ஏரல் தாசில்தார் செல்வகுமார் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

பேரணி நாசரேத் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு ரயில் நிலையம் வழியாக சென்று பஸ் நிலையத்தை அடைந்தது.

பொது மக்களுக்கு துண்டு பிரதிகள் வழங்கப்பட்டன. இதில் தேர்தல் துணை வட்டாட்சியர் முத்துலட்சுமி, ஆழ்வார் திருநகரி வருவாய் ஆய்வாளர் ஆண்டாள், கிராம நிர்வாக அலுவலர்கள் சிவராமன் , செந்தாமரை மற்றும்  கல்லூரி ஆசிரியர்கள், மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார்ரூபன்,  நிர்வாக அதிகாரி  வினோதா,நாட்டு நல பணித் திட்ட அலுவலர்  ஞானசெல்வன், உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர்,  பேராசிரியர்கள்  ஜேக்கப், சாம்ஜெனிஸ்  ஜெனிபா , அலுவலக உதவியாளர் ஞானராஜ்  மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்

Related Post