Sun. Jan 18th, 2026

சுண்டங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

தூத்துக்குடி மாவட்டம் சுண்டங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்த கல்வி ஆண்டின் முதல் தமிழ்க்கூடல் நிகழ்வு, விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா மற்றும் ஆற்றல் மன்ற போட்டி பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. மரிய ஜாண் பிரிட்டோ அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.

ஆற்றல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஏனோக் பிரபு வரவேற்புரை வழங்கினார்.

மாணவ மாணவியர்க்கு பேச்சு போட்டி, கவிதை ஒப்புவித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆற்றல் மன்ற ‘சிக்கன வார விழா’ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினராக டாக்டர் சந்திரபோஸ் அறக்கட்டளை டாக்டர் சிவராம கிருஷ்ணன் கலந்து கொண்டு விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசளித்தார்.

கணித ஆசிரியர் ரோஸ் எலிசபெத் நன்றியுரை வழங்கினார். ஆசிரியர்கள் ரோஸ்லின், அனிதா, ஸ்டெல்லா ஜேஸ்மின் மற்றும் செல்வக்கண்ணன் ஆகியோர் இந்த முப்பெரும் விழாவில் பங்குகொண்டனர்.

நிகழ்வை தமிழாசிரியர் பெல்சி பொன்செல்வி ஏற்பாடு செய்திருந்தார். 

Related Post