நாசரேத் நூலக வள்ளுவர் வாசகர் வட்டத்தின் சார்பாக நாசரேத் நூலக அரங்கில் வைத்து சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத்தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார்.
நூலகர் பொன் ராதா, பேராசிரியர் காசிராசன், துணைத் தலைவர் கொம்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

நவீன நாகரிகம் குடும்பத்தில் தருவது குதூகலமே…குழப்பமே…என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
இதில் தமிழ்ச்செம்மல் பாமணி நடுவராக செயல்பட்டார்.
குதூகலமே என்ற தலைப்பில் சரவணகுமார், சொர்ணவல்லி ஆகியோரும், குழப்பமே என்ற தலைப்பில் சுவாமிநாதன், இசக்கியம்மாள் ஆகியோரும் வாதிட்டனர்.
இதில் குதூகலமே என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்
மருத்துவர் விஜய் ஆனந்த், லோபோ மெட்ரிக் பள்ளி தாளாளர் முருகன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அருள்ராஜ், செல்வின், கவிஞர் தேவதாசன், தொழிற்சங்க தலைவர் கிருஷ்ணராஜ்,கவிஞர் சிவா, செல்லப்பாண்டியன், ஞானையா, கிறிஸ்டோபர், விபின் ஜெயக்குமார், சுரேஷ், சங்கர், ஜான் பிரிட்டோ, மனோகரன், உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் வாசகர் வட்ட முன்னாள் தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.
த. ஞான ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் நிருபர்
94 87 44 56 55


