நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் ஹெல்த் கேர் கிளப் சார்பில் இளையோர் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
கல்லூரி முதல்வர் ஜீவி எஸ்தர் ரெத்தினகுமாரி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனை மூத்த உதவி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ்குமார் மாணவ_ மாணவிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி, ஆரோக்கியமான வாழ்வினை குறித்து கலந்துரையாடல் நிகழ்த்தினார்.
பேராசிரியர்கள் கோயில்ராஜ் சாத்ராக், ஜேஸ்மின் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லூரி செயலர் பிரேம்குமார் ராஜாசிங், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை மேரி ஸ்டெல்லா மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.


