நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சியில் புகையில்லா சமத்துவ பொங்கல் இடப்பட்டது.
தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை நாசரேத் பேரூராட்சி ஊழியர்கள் கொண்டாடினர்.
விழாவிற்கு பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அருண் சாமுவேல் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைக்குமார் வரவேற்றார்.
சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் . முன்னாள் பஞ் தலைவர் ரவி செல்வக்குமார் மற்றும் தூய்மை பணியாளர்கள் துப்புரவு ஊழியர்கள் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


