Sun. Jan 18th, 2026

சாத்தான்குளம் மிக்கேல் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

சாத்தான்குளம் மிக்கேல் அறிவுசார் குறையுடையோர் சிறப்புப் பள்ளியில் வர்த்தக சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு சாத்தான்குளம் வர்த்தக சங்கத் தலைவர் அப்பு கண்ணன் தலைமை தாங்கினார் செயலாளர் மதுரம் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாரியம்மாள் ஒன்றியக் குழுத் தலைவி ஜெயபதி மற்றும் சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.

வர்த்தக சங்கமும் மிக்கேல் சிறப்புப் பள்ளி பணியாளர்களும் இணைந்து பொங்கல் சமைத்து பொங்கலோ பொங்கல் என வாழ்த்தொலி எழுப்பினர்.

அதன் பின்னர் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி முதல்வர் டாக்டர் லட்சுமி வரவேற்றார் .சிறப்பு விருந்தினர்கள் வர்த்தக சங்க கௌரவ ஆலோசகர் அரிமா ஜெயபிரகாஷ் பொருளாளர் முகமது இஸ்மாயில் சட்ட ஆலோசகர் ஏகே வேணுகோபால் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் சங்கர் அரசு ஒப்பந்தக்காரர் மலையாண்டி பிரபு கௌரவ ஆலோசகர் எஸ் பி எஸ் பேச்சி முத்து நிர்வாகக் உறுப்பினர் ஆர் எம் வி எஸ் முருகேசன் வர்த்தக சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் அரிமா பிகேபி செந்திலாறுமுகம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

அரிமா சங்க பொருளாளர் தங்கபாண்டி, அட்வகேட் ராபின்சன் ஸ்டான்லி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பவுலின் ராபின் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.

சிறப்புப் பள்ளி குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு பேரூராட்சி துணைத் தலைவர் மாரியம்மாள் இனிப்புகள் வழங்கினார் சிறப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு வர்த்தக சங்கம் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் சிறப்பாசிரியர்கள் தமிழ்ச்செல்வி, சுபாஷினி உதவியாளர் மகாராசி அலுவலக உதவியாளர் இசக்கிமுத்து, வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜான்ராஜ் தொழிலதிபர் அருண் திவ்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றச் செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மகாபால்துரை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

பள்ளி தாளாளர் சுசீலா மிக்கேல் நன்றி கூறினார்.

Related Post