Sun. Jan 18th, 2026

தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகல்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திடீரென அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளராக சுப்பையாபாண்டியன் பொறுப்பு வகித்து வந்தார். அவரது தலைமையில் கட்சி நிர்வாகிகள் பேச்சிராஜா, அருண் ஆறுமுகம், செல்வகணபதி, சக்திவேல், சந்தனராஜ், பேச்சிராஜா, சுடலைக்கண்ணு, ரமேஷ் உள்ளிட்ட சுமார் 32பேர் அக்கட்சியில் இருந்து விலகினர்.

இதுகுறித்து, தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் கூறியதாவது, நான் கடந்த 2009ம் ஆண்டில் இருந்தே கட்சியின் மீது கொண்ட அளவற்ற பற்றால் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளேன்.
கடந்த 2014 மற்றும் 2021ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்றுள்ளேன்.

கட்சியில் தற்போது புதியதாக பொருளாதாரத்துடன் வருபவர்களுக்கே முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். மாவட்ட செயலாளரான என்னைப்போன்றவர்களை தலைவர் கண்டுகொள்வதில்லை.

கட்சியில் இருந்து இரண்டுமுறை நீக்கப்பட்ட சாட்டை துரைமுருகன் என்பவரது சொல்லை கேட்டே அவர் நடக்கிறார். கட்சி பொறுப்பில் இருந்தாலும் எங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாமல் நடத்துவதால் வெளியேறுகிறோம் என்றார்.

Related Post