வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த காரை ஒதுக்கி நிறுத்துவது சம்பந்தமாக அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் அரிவாள் வெட்டில் முடிந்தது தம்பி கைது.
மெஞ்ஞானபுரம் பாய் ஸ்கூல் ரோட்டில் வசிப்பவர் யோசியேப்பு மகன்கள் தாமஸ்ஆல்வா எடிசன் (41) அவரது தம்பி கென்னடி.(38) நேற்றுமுன்தினம் சகோதரர்கள் இருவரும் வீட்டில் இருந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
அப்போது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த காரை ஒதுக்கி நிறுத்துவது சம்பந்தமாக கென்னடி தனது தம்பி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதை தாமஸ் கண்டித்துள்ளார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது மது போதையில் இருந்த கென்னடி ஆத்திரத்தில் அங்கு கிடந்த அரிவாளால் தாமஸ்ஆல்வா எடிசனை வெட்டியுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை வழக்கு பதிவு செய்து கென்னடியை தேடி வந்தனர். காட்டு பகுதியில் பதுங்கி இருந்த கென்னடியை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


