தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடு கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. இத்திரு கோவிலின் ஆவணி திருவிழா கடந்த மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஏழாம் திருநாளான இன்று(06.09.2026) பிள்ளையன் கட்டளை மண்டக படியில் இருந்து தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி ஆறுமுக நயினார் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிவப்பு மலர் மாலைகளையும் சிவப்பு ஆடைகளையும் சுவாமிக்கு பக்தர்கள் வழங்கி சாமி தரிசனம் செய்தனர்.


