spot_img
13.6 C
New York
Tuesday, October 27, 2026

Buy now

spot_img

மின்சாரம் தாக்கி தொழிலாளி காயம்

திசையன்விளையில் சென்டிங் வேலை செய்யும் போது எதிர்பாராத மின்விபத்து ஏற்பட்டது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் சென்டிங் வேலை செய்து கொண்டிருந்த ஆகாஷ்தாஸ் என்ற வாலிபர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

திசையன்விளை தினசரி சந்தையின் கீழ் புறம் இருந்த பழைய கலையரங்கம் இடிக்கப்பட்டு புதிய கலையரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் கம்பி கட்டும் பணியில் ஆகாஷ்தாஸ் என்ற வாலிபர் ஈடுபட்டிருந்தார்.

கலையரங்க கட்டிடத்தை ஒட்டி மின்கம்பிகள் உள்ளன. இம்மின் கம்பியில் ஒன்று ஆகாஷ் தாஸ் மீது உரசியதால் அவர் தூக்கி வீசப்பட்டார். கால்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

திசையன்விளை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து அவரை கலையரங்க மாடியில் இருந்து இறக்கி 108 ஆம்புலன்ஸ் மூலம் திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு பணியில் இருந்த மருத்துவர் அம்ரிஷ் மின்சாரத்தால் பாதிக்கப்பட்ட ஆகாஷதாசுக்கு சிகிச்சை அளித்து திருநெல்வேலி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கூடுதல் சிகிட்சைக்காக அனுப்பி வைத்தார்.

ஆகாஷ்தாசின் கவனக்குறைவே இம்மின் விபத்திற்கு காரணம் என உடன் பணியாற்றிய பணியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்