கூவைகிணறு புனித பாத்திமா ஆலயத்திற்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி சனிக்கிழமை மாலை வருகை தந்து சபை மக்களுடன் உரையாடினார்

சாத்தான்குளம் அருகே நெடுங்குளம் பங்கிற்கு உபட்ட கிளை பங்கான கூவைகிணறு புனித பாத்திமா ஆலயத்திற்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி சனிக்கிழமை வருகை தந்தார்.

அவருக்கு சபை மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஆலயத்தில் ஆயர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

தொடர்ந்து ஆயர் சபை மக்களிடம் குறைகள் கேட்டறிந்து ஆலய வளர்ச்சி குறித்து விவாதித்தார். அப்போது கேள்வி கேட்டு சரியான பதிலளித்த மக்களுக்கு பரிசும் வழங்கினார்.
பின்னர் சபை குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இதில் நெடுங்குளம் பங்குதந்தை கிங்ஸ்டன் சேவியர் , உதவி பங்கு தந்தை ஜார்ஜ் உள்ளிட்ட சபை மக்கள் கலந்து கொண்டனர் .


