Sun. Jan 18th, 2026

நாசரேத்தில் ஞாயிற்றுக்கிழமை  பொங்கல் சிறப்பு வாரச்சந்தை

நாசரேத்தில் வருகிற 12ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல் சிறப்பு வாரச்சந்தை நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பேரூராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை தினமான ஜனவரி 14 ந் தேதி செவ்வாய்க்கிழமை விடுமுறை தினம் என்பதால் நாசரேத் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொங்கலுக்கு முன்னதாக வருகிற 12 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு வார சந்தை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைக்குமார் தெரிவித்துள்ளார்

த. ஞான்ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் -நிருபர்

Related Post