spot_img
13.6 C
New York
Tuesday, October 27, 2026

Buy now

spot_img

தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான திறனறிதல் போட்டி

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான ஓவியம், கையெழுத்து, கவிதை மற்றும் பேச்சாற்றல் உட்பட்ட திறனறிதல் போட்டிகள் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட 14 பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இப் போட்டிகளுக்கு நடுவர்களாக ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் எமிலி எஸ்தர்ராணி, ரெஜினா எலிசபெத், மெர்லின், எமிலி ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை தாங்கினார்.

முதலாம் ஆண்டு துறைத் தலைவர் சோபியா ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி பாடகர் குழுவினர் சிறப்பு பாடல் பாடினர். இயந்திரவியல் துறைத் தலைவர் பிரபாகர் வேதசிரோன்மணி வேத பாடம் வாசித்தார். ஆட்டோமொபைல் துறைத் தலைவர் ஜான் வெஸ்லி வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக நாசரேத் நகர கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் கலந்து கொண்டு போட்டி தேர்வு பற்றி சிறப்புரை வழங்கி திறனறிதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிறைவாக எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறை தலைவர் பெனிட்டா ராஜு நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிகளை ஆசிரியர் ஜான் வெலிங்டன் தொகுத்து வழங்கினார். அமைப்பியல் துறை தலைவர்
ரஞ்சன் நிறைவு ஜெபம் செய்தார். நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவு பெற்றது.

ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் மற்றும் திருமண்டல செயற்குழு உறுப்பினருமான ‘ஐடியல்’ தொழிலதிபர் அருள்ராஜா தலைமையில் முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் லிவிங்ஸ்டன் நவராஜ், ஜோசப் பர்னபாஸ், ஜேம்ஸ் கம்ப்ரே மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்