தவெகவில் இணைந்த வழக்கறிஞர் புவனேஸ்வரன் ஸ்ரீவைகுண்டம் சரவணன் எம்.எல்.ஏ.,வை நேரில் சந்தித்தார்.
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்தோப்பை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் புவனேஸ்வரன் அமமுகவில் இருந்து விலகி தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார்.

அதனைத்தொடர்ந்து, வழக்கறிஞர் புவனேஸ்வரன் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளரும், மீன் வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதன்தொடர்ச்சியாக வழக்கறிஞர் புவனேஸ்வரன் தூத்துக்குடி மேற்கு மாவட்ட செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.,வுமான அன்னை வி.ஜி.சரவணனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, வழக்கறிஞர் ஸ்ரீவை சங்கரலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆழ்வார்விஜய், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெயசித்ரா, நிர்வாகிகள் பொன்ராஜ், அருள், தினேஷ், வேல்முருகன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.


