spot_img
13.6 C
New York
Tuesday, October 27, 2026

Buy now

spot_img

ஆழ்வை சமத்துவபுரத்தில் பெரியார் பிறந்தநாள் விழா.! – தவெகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

ஆழ்வை சமத்துவபுரத்தில் தவெகவினர் பெரியார் பிறந்தநாள் கொண்டாடினர்.

தூத்துக்குடி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான அன்னை வி.ஜி.சரவணன் வழிகாட்டுதல்படி ஆழ்வார்திருநகரி நகரம், ஆழ்வார்திருநகரி மத்திய ஒன்றியம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் சார்பில் பெரியாரின் 148 பிறந்தநாள் விழா ஆழ்வார் திருநகரி அருகேயுள்ள சமத்துவபுரத்தில் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு மேற்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் பலவேசம், ஆழ்வை நகர செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.

விழாவில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய பொறுப்பாளர் கணேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்., தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வள்ளிநாயகம், வார்டு செயலாளர் திலக்செல்வன், ஸ்ரீவை ஒன்றிய இணைச்செயலாளர் தேவதாஸ், ஸ்ரீவை ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேலு மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஊட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இணைந்திருங்கள்

0FansLike
0FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

தொடர்புடைய செய்திகள்