தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, நாசரேத் அருகே உள்ள
மூக்குப்பீறி கிராமம் ஞானராஜ்நகர் பகுதியில் புதிய நியாய விலை திறக்கப்பட்டது
புதிதாக திறக்கப்பட்டுள்ள நியாய விலை கடைக்கு மின் இணைப்பு இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.
மின் இணைப்பு வழங்கப்படாததால் ரேஷன் கடை ஊழியர்கள் பில் போடும் இயந்திரத்தையும், எடை இயந்திரம் செயல்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு பொருள் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.
மேற்படி நியாய விலை கடைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய நியாய விலை கடையின் முன்பாக நிழற்கூரை இல்லாததால் பொருள் வாங்க வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பதாகவும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நியாய விலை கடை முன்பு நிழற்கூரை அமைத்துதர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்


