பொருநை இலக்கியத் திருவிழாவில் சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவி மாவட்ட கலெக்டரிடம் பரிசு பெற்றார்.
தூத்துக்குடி வ உ சி கல்லூரியில் பொருநை இலக்கியத் திருவிழா நடந்தது.
வட்டார அளவிலான நூல் அறிமுகப் போட்டியில் 9 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் சாத்தான்குளம் டி என் டி டி ஏ ஆர் எம் பி புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி நிமா ஆண்ட்ரியா இரண்டாம் இடம் பெற்றார் .
இதற்கான ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம் பகவத் வழங்கினார்
வெற்றி பெற்ற மாணவியை பள்ளித் தாளாளர் டேவிட் வேதராஜ், பள்ளித் தலைமை ஆசிரியர் செல்லபாண்டியன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


