சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத்தில் இசை மீட்டிப் பாடல் பாடும் கலை நிகழ்ச்சி நடந்தது.
சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத்தில் இளையோர் அமைப்பு சார்பில் இசை மீட்டிப் பாடல் பாடும் கலை நிகழ்ச்சி நடந்தது

பங்குத்தந்தை மற்றும் மறை வட்ட முதன்மை குரு செல்வ ஜார்ஜ் தலைமை தாங்கினார். உதவி பங்குத்தந்தை செல்வகுமார் முன்னிலை வகித்தார். குரு மாணவர் கிறிஸ்டஸ் அமல தீபன் வரவேற்றார்.
பங்குப் பேரவை துணைத் தலைவர் ஜேம்ஸ் பால்ராஜ் அருட் சகோதரி ஆரோக்கிய செல்வி ஆகியோர் பேசினர். ஜெஸ்வின், ஜெருஸ் ராஜா, ஜெபிஸ் பத்மநாத், ஜினோதாம்சன் , அஸ்லின், விஜோசா மெர்லின், மரிய நோபினா, ஆகியோர் இசை இசைத்தனர்.
செல்வராஜ், அந்தோணி சவரிமுத்து ,லீமா மேரி, பிரின்சோ, நிர்மலா,ரெஜிஸ்பெர்லாள், ஜெசிகா, விக்டர் மேரி கீதா, டென்சி, சுபா, ஜெனோலின் ஏஞ்சல் உட்பட இளையோர் அமைப்பினர் பாடல்கள் பாடினர்.
நிகழ்ச்சியில் திருமணம் முடிந்து 50 ஆண்டுகள் மற்றும் 25 ஆண்டுகள் நிறைவுற்ற தம்பதிகளுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை இளையோர் அமைப்பு அனீஸ், கிங்ஸ்டன், அருள், ரெஜில்சனா, சுவேதா, கிளாடிஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
பங்குப் பேரவை உறுப்பினர்கள் அரசரெத்தினம், அலெக்ஸ் ,வளன் ஜோன் குமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். பங்குப் பேரவை பொருளாளர் ராஜன் நன்றி கூறினார்.
