சாத்தான்குளத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்கான முன்னோடி மனுக்கள் பெறும் முகாம்களில் 400 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மாதம் 22ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற நிகழ்ச்சி சாத்தான்குளம் தாலுகாவில் நடக்கிறது .
தூத்துக்குடி கலெக்டர் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்
இதற்கான முன்னோடி மனுக்கள் பெரும் முகாம் சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள மூன்று குறு வட்டங்களில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் நடந்தது.
சாத்தான்குளம் மண்டல துணைத் தாசில்தார் அகஸ்டின் பாலன், தேர்தல் பிரிவு துணைத் தாசில்தார் கோமதி சங்கர், வட்ட வழங்கல் அலுவலர் சுவாமி நாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சின்னத்துரை, உலகு, வருவாய் ஆய்வாளர்கள் வேலம்மாள், பிரஷ்யா நிறையா, சித்ரா, நில அளவையர்கள் தேவிகா, நாராயண ஈஸ்வரி ,சிவராஜ், மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ் குமார், சுபாஷ், சத்யராஜ், சிவகாமி, செந்தில் முருகன், கருப்பசாமி, விஸ்வநாதன், துரை உட்பட அனைத்து விஏஓக்களும் கலந்து கொண்டு பொதுமக்களிடம் 400 மனுக்களை பெற்றனர்.
பெறப்பட்ட மனுக்கள் அனைத்திற்கும் 22ஆம் தேதி நடைபெறும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாமில் தீர்வு வழங்கப்படும் என சாத்தான்குளம் தாசில்தார் இசக்கி முருகேஸ்வரி கூறினார்.
