சாத்தான்குளம் அருகே உள்ள வேலாயுதபுரம் ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியின் கல்விப் புரவலர் பரஞ்சோதி செல்வராஜ் தலைமை வகித்தார்.
பள்ளித் தாளாளர் அருட்பணி இருதயசாமி முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் சேசு ராஜகுமாரி வரவேற்றார்.
கிராம கல்விக் குழுத் தலைவர் மரியஜெபமணி, லிட்டில் மேரி ஆசிரியர் ஆகியோர் பேசினர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. உதவி ஆசிரியர் ரெபேக்காள், அமைப்பாளர் மரிய விமலா, சாந்தி,அபிநயா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பால் தங்கம் ,இசக்கியம்மாள், ஏசுதாசன், சுமதி, ஞான செல்வி ,அனுசியா, ஆரோக்கிய செல்வன், நிவேதா ,மாலினி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்.