Tue. Jul 1st, 2025

ஸ்ரீவைகுண்டத்தில் சித்த மருத்துவ தின கருத்தரங்கம்

ஸ்ரீவைகுண்டம் கல்லூரியில் சித்த மருத்துவ தின கருத்தரங்கம் நடந்தது.
8வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு ”சித்த மருத்துவமும் வாழ்வியலும்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு கல்லூரி செயலர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கில், சித்த மருத்துவர் ரதிசெல்வம் “மக்கள் நலனில் சித்தமருத்துவத்தின் பங்கு” என்ற தலைப்பிலும், சித்த மருத்துவர் செல்வகுமார் “சித்தமருத்துவமும் வாழ்வியலும்” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.

இதில், பேராசிரியர்கள் சரவணன், பார்வதி, பேச்சிமுத்து, முத்தையா, அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

Related Post