Tue. Jul 1st, 2025

திருப்பூரில் GST வரி உயர்வை கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு :

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் ஒரு நாள் அடையாளம் கடையடைப்பு போராட்டம் மூலம் தங்கள் எதிர்ப்பை மத்திய மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்த அனைத்து வணிகர் சங்கங்களும் எதிர்கட்சிகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் கடைகள் அடைக்கப்பட்டு ஏறத்தாழ 100 கடை வர்த்தகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

திருப்பூரில் மளிகை கடைகள் உணவகங்கள் பேக்கரி கடைகள், துணிக்கடைகள் நகைக்கடைகள், செல்போன் கடைகள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

மேலும் திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கமும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் இரண்டாயிரம் மேற்பட்ட பணி நிறுவனங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளது

இந்த போராட்டத்திற்கு அதிமுக பாஜக கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளது.

திருப்பூர் செய்திகளுக்காக
புன்னகை தேசம்
வெ. முத்துப்பாண்டி

Related Post