Tue. Jul 1st, 2025

சாத்தான்குளம் அமுதுண்ணாக்குடி தரை மட்ட பாலத்தில் வெள்ளம்

சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்னாகுடிக்கு அடுத்ததாக கருமேனி ஆற்றின் தரை மட்ட காலம் உள்ளது 

ஆண்டுதோறும் இந்த தரைமட்ட பாலத்தில் குளங்கள் நிரம்பினாலும், கனமழை பெய்தாலும் காற்றாற்று வெள்ளம் ஆனது அதிகளவில் சென்று போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்

காட்டாற்று வெள்ளம் செல்லும் காலங்களில்  இந்த சாலையை பயன்படுத்தும் நெடுங்குளம், கலங்குவிளை, கொம்பன்குளம்,  வரிப்பிலான்குளம், மேட்டு குடியிருப்பு, துவரங்குளம், கூவைங்கிணறு, கோமானேரி ஊர் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பது வழக்கமான ஒன்றாகும்

தற்போதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அமுதுண்னாகுடி தரைப் பாலத்தில் ஆர்ப்பரித்து காட்டாற்று வெள்ளம் செல்கிறது

இந்தத் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Post