Tue. Jul 1st, 2025

பேய்க்குளம் அருகே சாலையில் தண்ணீர் – உடனடியாக அகற்றிய சாத்தான்குளம் நெடுஞ்சாலைத் துறையினர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் அருகே உள்ள் பனைக்குளத்தில் திருநெல்வேலி சாத்தான்குளம் சாலையில் மழைநீர்  முட்டு அளவிற்கு தண்ணீர் தேங்கி ஓடுவது குறித்து புன்னகை தேசம் செய்திக்கு தகவல் வந்தது

இது குறித்து உடனடியாக சாத்தான்குளம் நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் சிவ சண்முகநாதன் அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது

தகவல் கிடைத்தவுடன் உடனடியாக களத்தில் இறங்கிய சாத்தான்குளம் நெடுஞ்சாலை துறையினர் சாத்தான்குளம் உதவி கோட்ட பொறியாளர் லதா, இளநிலை பொறியாளர் சிவசண்முகநாதன் தலைமையில், சாலை ஆய்வாளர் முருகன், சாலை பணியாளர்கள் ஞானசேகர், யாக்கோபு, ராஜதுரை, தானியல் ஆகியோர்  களத்தில் இறங்கி சாலையில் தேங்கிருந்த மழை நீரை ஜேசிபி உதவியுடன் அகற்றினர்.

உடனடியாக மழைநீர் அகற்றப்பட்டதனால் பொதுமக்களும் வாகன ஓட்டுனர்களும் சமூக ஆர்வலர்களும் சாத்தான்குளம் நெடுஞ்சாலை துறையினருக்கு  பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும்  தெரிவித்தனர்

சாத்தான்குளம் நெடுஞ்சாலைத் துறையினருக்கு புன்னகை தேசம் வார இதழ் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்

Related Post