தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட காமராஜர் சிலை முன்பு நாசரேத் செல்லும் சாலையிலும், முதலூர் செல்லும் சாலையில் சி.எஸ்.ஐ கோவில் முன்பும் மழை நீரானது வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது
ஆண்டுதோறும் மழை பெறும் காலங்களில் இச்சாலை ஆனது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் வெள்ளநீர் செல்வதனால் தமிழக அரசும், பேரூராட்சி நிர்வாகமும் உரிய வழிமுறைகளை செய்து தண்ணீர் செல்வதற்கு மாற்று வழி ஏற்பாடு செய்ய வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
பா. ஜான்சன் பொன்சேகர்
புன்னகை தேசம் நிருபர்
தூத்துக்குடி