தூத்துக்குடி மாவட்டம் போலையர்புரத்தில் உடன்குடி புது இதயம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் ஈகை விழாவில் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

விழாவிற்கு உடன்குடி புது இதயம் அறக்கட்டளையின் இயக்குநர் திரவியராஜ் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஜோசப் துரைராஜ் முன்னிலை வகித்தார். ஏஞ்சல் அன்னத்தாய் வரவேற்புரை ஆற்றினார்.
போலையர்புரம் சேகரத்தலைவர் மணிராஜ் ஆரம்ப ஜெபம் செய்தார். சாஸ்தாவி நல்லூர் விவசாய சங்க செயலாளர் லூர்து மணி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக உடன்குடி அன்னம் குரூப்ஸ் சேர்மன் சந்திரசேகரன் போலையர்புரம் கிராமத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் 70 பேருக்கு சேலை, வேட்டி, சட்டைகள் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் 15 குடும்பத்திற்கு பெட், போர்வை, மற்றும் புத்தாடைகளை வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை புது இதயம் அறக்கட்டளையின் இயக்குநர் திரவியராஜ் தலைமையில் விழா ஒருங்கிணைப்பாளர்கள் பாக்கியராஜ், எங்ஸ்டன் டேனியல் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர். நிறைவாக ஜெபஸ்டின் நன்றி கூறினார்.
த. ஞானராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் -நிருபர்