நாசரேத்தில் போத்தீஸ் நிறுவனம் சார்பில் கிறிஸ்துமஸ் இன்னிசைப் பெருவிழா நடந்தது
நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் காமா ஜெபக்குழுவின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு நெல்லை போத்தீஸ் நிறுவனம் சார்பில் கிறிஸ்துமஸ் இன்னிசைப் பெருவிழா நடந்தது.
தூய யோவான் பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து தொடங்கி வைத்தார். காமா ஜெபக்குழு தலைவர் பில்லி கிரஹாம் வரவேற்றார் . காமா ஸ்தாபகர் சாமுவேல் முன்னிலை வகித்தார் . ஜாண்ஷினி , பிரெய்ஸ்லின் ஸ்டீபன் , ரஷில்டா பென்னி, கிறிஸ்டோபர், நெல்சன் ஆகியோர் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடினர். பாரம்பரிய மிக்க பாடல்கள் இடம் பெற்றது.
சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ_ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
தொடர்ந்து நலத்திட்ட உதவிகளாக 6 பேருக்கு தையல் இயந்திரமும், 600 பேருக்கு அரிசியும் வழங்கப்பட்டன.
பார்வையார்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட்டது.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி, தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ம், 12 ம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ_ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் முன்னாள் எம்பி ஏடிகே ஜெயசீலன், போத்தீஸ் நிறுவன மேலாளர் கனிபாய், சொர்ண மஹால் ஜுவல்லர்ஸ் மேலாளர் ராஜு, நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், தாவீது சுந்தரனார் சபை மன்ற தலைவர் டேவிட் ஞானையா, திருமறையூர் மறுரூப ஆலய சேகர தலைவர் ஜான் சாமுவேல், தூய யோவான் பேராலய உதவிகுரு. பொன் செல்வின் அசோக் குமார் மற்றும் குருமார்கள், பேராலய மக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் திரளானோர் கண்டு களித்தனர் .
ஏற்பாடுகளை நாசரேத் காமா ஜெபக்குழு ஸ்தாபகர் அருட்திரு. அறிவர் பி.ஆர்.சாமுவேல், தலைவர் பில்லிகிரஹாம், உபதலைவர் மர்காஷிஸ், செயலாளர் ஜெபின், இணைச்செயலர் லவ்சன், செயற்குழு செயலர் செல்வின், பொருளாளர் மேஷாக், குரூஸ் மாசில்லாமணி, ஜெஸ்வின், பாடகர் குழு தலைவர் ஜோயல், கன்வீனர்கள் விமல் சுதாகர், ஜாண்சன், கெளரவ ஆலோசகர் நெய்ல்சன், பாடகர் குழு இயக்குனர் பவுளி திலக் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.
த. ஞானராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நாசரேத் நிருபர்