தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் பகுதியில் உள்ள கல்குவாரிகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கானடாரஸ் லாரிகளில் சரள் மணல், கல் வாகனத்தின் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஏற்றப்பட்டு, தார்ப்பாய் போட்டு மூடாமலும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.

மேற்படி லாரிகளால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலரும் பொதுமக்களும் குற்றச்சாட்டு வருகின்றனர்
இந்நிலையில் நேற்று முன்தினம் மெஞ்ஞானபுரத்தில் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரம் டாரஸ் லாரிகளை இயக்கக் கூடாது என சிறை பிடித்தனர். அதன் பிறகு சாத்தான்குளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுபக்குமார் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி காலை மற்றும் மாலையில் குறிப்பிட நேரம் லாரிகள் இயங்காது என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது
இந்நிலையில் இன்று காலையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவு சரள் கற்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரிகள் செட்டிகுளம் ஊருக்குள் உள்ள வேகத்தடையில் பிரேக் பிடிக்காமல் சென்றதனால், வாகனத்தின் உயர்த்தை விட அதிகமாக இருந்த லாரியில் இருந்த சரலள் மண் சாலையில் கொட்டியது
உடனடியாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு சாத்தான்குளம் காவல்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டு, சாலையில் கொட்டிய சரள கற்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்
அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக பாரம் ஏற்றிக்கொண்டு வரும் டாரஸ் லாரிகளால் ஏதேனும் அவம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு காவல்துறையினரும் வருவாய்த் துறையினரும் இணைந்து டாரஸ் லாரிகளை கட்டுப்படுத்த வேண்டுமென இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
A. முத்துச்செல்வன்
புன்னகை தேசம் நிருபர், சாத்தான்குளம்