
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார்.
மாணவர்கள், கல்வி என்பது இரு கண்கள் போன்றது என்ற பள்ளி வாழ்த்து பாடலை பாடினர்.
குழந்தைகள் தினம் குறித்து மாணவர் செல்வபாலா தமிழிலும், மாணவர் சுதீப் சிங் ராஜா ஆங்கிலத்திலும் எடுத்துரைத்தனர். குழந்தைகள் தின கருத்துக்களின் அடிப்படையில் தாங்கள் வரைந்து கொண்டு வந்த வண்ண வரைபடங்களை மாணவர்கள் காட்சிப்படுத்தினர்.
தலைமையாசிரியர் குணசீலராஜ் குழந்தைகள் தினம் குறித்து சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கான நினைவு பரிசுகளை அறிவியல் ஆசிரியர் ஜென்னிங்ஸ் காமராஜ், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர் ஆகியோர் வழங்கினர்.
தேசிய மாணவர் படை பிரிவு அலுவலர் சுஜித் செல்வசுந்தர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தனபால், தொழிற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். நிர்வாகப் பிரிவு ஆசிரியை எஸ்தர் நன்றி கூறினார்.
குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் சுதாகர், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.