Thu. Jan 15th, 2026

சாத்தான்குளம் அருகே தட்டார்மடத்தில்  200 கிலோ புகையிலை பறிமுதல் – 5 நபர்கள் கைது

சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் சுற்றுவட்டார பகுதியில்  புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சாத்தான்குளம் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் டேவிட் தலைமையிலான தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் விசாரணை மேற்கொண்டு ஆய்வு செய்தபோது புகையிலை விற்பனை செய்த  சாத்தான்குளம் மாணிக்கவாசபுரத்தை சேர்ந்த செல்வசேகர், சதீஷ் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து  200 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள செல்வசேகரின் சகோதரர் ராஜலிங்கம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Post