Mon. Aug 25th, 2025

சாத்தான்குளத்தில் கடன் வழங்கும் விழா

இ.இ.153 சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்  2 வது புதிதாக தொடங்கப்பட்ட சங்கரன் குடியிருப்பு கிளையில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. சங்க செயலாட்சியர் வெங்கட்குமார் தலைமை வகித்து 13 உறுப்பினர்களுக்கு 7.35 லட்சம் கடன் வழங்கினார்.

சங்க செயலர் எட்வின் தேவாசிர்வாதம் சங்க செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசி வரவேற்றார். கிளை மேலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

விழா ஏற்பாடுகளை கிளை பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Post