ஜனவரி – 30
திருவண்ணாமலையில் தேரடி வீதியில் மார்பளவு உயர வெண்கல மகாத்மா காந்தி சிலை அமைந்திருந்தது.

மூன்று மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மாட வீதி உலா வரும் சாலையில் சிமென்ட் சாலை அமைப்பதற்காக
நெடுங்காலமாக இருந்த மகாத்மா காந்தி சிலை அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டது.
அப்பகுதியில் சாலை அமைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், தீபத்திருவிழா நடைபெற்ற காரணத்தால் சிலை அப்பகுதியில் நிறுவ தாமதம் ஆவதாக காரணம் கூறப்பட்டது.
தீபத்திருவிழா முடிந்து இரண்டு மாதங்களாகியும் மீண்டும் சிலை இருந்த பழைய பகுதியில் சிலையை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.
மீண்டும் பழைய இடத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தி சிலை அமைத்திட மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி காந்தி சிலை அமைந்திருந்த இடத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரேசன் என்பவர் தனி நபராக சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி வருகிறார்.
இது அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.