Mon. Sep 16th, 2024

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சாத்தான்குளம் அருகே சாஸ்தாவிநல்லூர் கிராமத்தில் விவசாய நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. .

டெல்லியில் விவசாயிகள் விவசாய பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி விவசாயிகள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சாத்தான்குளம் அருகே சாஸ்தாவிநல்லூர் விவசாய நல சங்கத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் தலைவர் எட்வின் காமராஜ் அறிவுறுத்தலின் பேரில் சங்க செயலாளர் லூர்து மணி தலைமை வகித்தார். இதில் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், இயற்கை விவசாயி செந்தில், அதிசயபுரம் விவசாய சங்க தலைவர் செந்தில், சங்க செயலாளர் ஜான் ஆசிரியர், எட்வர்ட் லாரன்ஸ், சங்க பொருளாளர் ரூபேஷ்குமார், சங்க செயலாளர் ஜஸ்டின் ஜெயராஜ், செயற்குழு உறுப்பினர்கள் சந்தன திரவியம், அலெக்ஸ், ஜெயக்குமார், செல்வ ஜெகன், கொழுந்தட்டு விவசாய சங்க தலைவர் ராகவன், எள்ளு விலை விவசாய சங்க செயலாளர் பெருமாள், கொழுந்தட்டி விவசாய சங்க செயலாளர் சந்தன மரியான், உறுப்பினர்கள் அம்புரோஸ், சவரிராஜன், ஜெயராஜ் மற்றும் பெல்சிய.ா, ரூபி உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Post