Wed. Jan 14th, 2026

லக்னோவில் தேசிய சாரணர் திரளணி: பங்கேற்றநாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா!

உத்தரப் பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்ற பாரத சாரணர் தேசிய திரளணியில் பங்கேற்ற நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி சாரணர் இயக்கத்தைச் சார்ந்த 21 மாணவர்கள் உத்திர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்ற பாரத சாரணர் தேசிய திரளணியில் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் பாராட்டு விழா பள்ளியில் வைத்து நடைபெற்றது.

விழாவிற்கு தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி சாரணர் இயக்க பொறுப்பாசிரியர் ஸ்டீபன் பிரேம்குமார் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் கல்வி மாவட்ட சாரணர் இயக்கத் தலைவரும் முன்னாள் தலைமை ஆசிரியருமான ரத்தினகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டிப் பேசினார். அப்போது அவர், சாரணர் இயக்கத்தின் முக்கியத்துவம், மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் கிடைக்கக்கூடிய முன்னுரிமை ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சிகளை தமிழ் ஆசிரியர் அம்புரோஸ் சுகிர்தராஜ் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருச்செந்தூர் கல்வி மாவட்ட சாரணர் இயக்க செயலாளர் சாமுவேல் சத்தியசீலன் வழிகாட்டுதலின் பேரில், பொருளாளர் ஆபிரகாம் இம்மானுவேல், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர், சாரணியர் ஆசிரியை வளர்மதி, ஓவிய ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Post