Thu. Jan 15th, 2026

பேய்க்குளம் அருகே தாயாரை வெட்டிய மகன் – காவல் வாகனத்தில் மருத்துவமனைக்கு ஏற்றி சென்ற சாத்தான்குளம் காவல்துறையினர்

சாத்தான்குளம்  தாலுகா பேய்க்குளம் அருகே உள்ள செங்குளத்தில் சுதா செல்வி (வயது 63) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் விஜயகுமார் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 45) என்ற மகனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். மகனுடன் குடியிருந்து வருகிறார்

இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக இன்று காலை ஆனந்தராஜ் தனது தாயார்  சுதா செல்வி அவர்களை அறிவாளால் தலையில் வெட்டினார்.

சம்பவம் குறித்து உள்ளூர் மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் அடுத்து, சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன்  அவர்கள் தலைமையில் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாககுமாரி, காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவலர்கள்  சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று சுதா செல்வி  அவர்களை உயிருக்கு போராடிய நிலையில் இருந்து மகனிடம் இருந்து  மீட்டனர்

சுதா செல்வி அவர்களை சிகிச்சைக்கு மருத்துவமனை அனுப்புவதற்கு சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வர தாமதமான காரணத்தினால் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் வாகனத்தில் ஏற்றீ சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சை அளிப்பதற்காக  திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பியிருந்தனர் 

வேகமாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவரை காப்பாற்றியும், மனிதாபிமான அடிப்படையில்  பாதிக்கப்பட்டவரை காவல் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன்  அவர்களையும் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாககுமாரி, காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் சாத்தான்குளம் காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்

புன்னகை தேசமும் சாத்தான்குளம் காவல்துறையினரை பாராட்டி மகிழ்கின்றோம்

Related Post