Thu. Jan 15th, 2026

ஆறுமுகநேரியில் கோவில் பூசாரி வெட்டிக் கொலை: மர்ம நபர்கள் வெறிச் செயல் – போலீஸ் விசாரணை!

ஆறுமுகநேரியில் கோவில் பூசாரியை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரம் செல்லதுரை மகன் முருகேசன் (54). இவர் காயல்பட்டினம் பைபாஸ் ரோட்டில் உள்ள சுடலைமாடசாமி கோவிலில் பூசாரியாக உள்ளார்.

இன்று மாலை 4 மணியளவில் அவர் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோவில் அருகே வைத்து மர்ம கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து தகவல் அறிந்து ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை தொடர்பாக வழக்குப் பதிந்து, அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

த. ஞானராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம் நிருபர்
9487445655

Related Post