Tue. Aug 26th, 2025

பொன்னேரி மீன்வளக்கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட முகாம்

பொன்னேரி டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நாட்டு நலப்பணித்திட்ட முகாம் பொன்னேரி அடுத்த தேவம்பட்டில் கல்லூரி நாட்டு நலப்படுத்திட்ட அலுவலர் சுருளிவேல் தலைமையில் நடைபெற்றது

இதில் கல்லூரி முதல்வர் ஜெயசகீலா மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மரக்கன்று நடுதல், பள்ளி மற்றும் கோயில் வளாகங்களை சுத்தம் செய்தல், தெருக்களில் உள்ள நெகிழிகளை அகற்றுதல், பள்ளி மாணவர்களுக்கு, ஊர் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் நடுதலின் அவசியம் பற்றி விழிப்புணர்வு செய்தல், நெகிழி இல்லா தமிழ்நாடு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

இதில் மரக்கன்று நடுதலின் அவசியம் பற்றி நேதாஜி ட்ரீ பவுண்டேஷன் ஸ்ரீதர் பாபு கலந்து கொண்டு பேசினார். மீன்வள பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி மீன்வள உதவி இயக்குனர் முனைவர் ஜனார்த்தனன் பேசினார்.

கல்லூரி நாட்டு நலப்படுத்திட்ட அலுவலர் முனைவர் இல.சுருளிவேல், உதவிப் பேராசிரியர் ஒருங்கிணைப்பு செய்தார். இதில் உதவிப் பேராசிரியர்கள் செல்வராஜ், சரவணன், மௌலிதரன், கண்ணன், ஜாக்குலின் வினோ, சந்தியா மற்றும் பண்ணை மேலாளர்கள் ரம்யா, முனைவர் ரூபி உட்பட ஊர் பொதுமக்கள் மாணவருடன் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டனர்

ஜெ. மில்ட்டன், பொன்னேரி

Related Post