Sat. Jan 17th, 2026

இறந்தவர்களின் உடலை கொசத்தலை ஆற்றில் புதைக்க எதிர்ப்பு – தனியாக இடம் ஒதுக்க கோரிக்கை

மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 9,13, 14, 15,16 பகுதிகளில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்2000 க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர் இந்நிலையில் அப்பகுதியில் உள்ளவர்கள் இறந்தால் புதைப்பதற்கு தனியாக இடம் இல்லாததால் அவர்களை, கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் புதைத்து வருகின்றனர்

மழைக்காலங்களில் கரையோரம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் புதைப்பதற்கு இடம் இல்லாமல் கடந்த பல வருடங்களாக தவித்து வருவதாகவும், மழை காலங்களில் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று அருகில் உள்ள பகுதியில் புதைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் எங்கள் பகுதியில் உள்ள அரசு நிலத்தில் இடம் ஒதுக்கி ஈடுகாடு அமைக்க வேண்டுமென மீஞ்சூர் பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் கவிதா சங்கர் தலைமையில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி அதிகாரி கணேஷ் அவர்களிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்

மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் இதில் பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம் துணை வட்டாட்சியர் பாரதி மற்றும் பலர் உடன் இருந்தனர்

ஜே. மில்ட்டன்
திருவள்ளுர்

Related Post