Thu. Jan 15th, 2026

தமிழக அரசின் விலையில்லா நோட், பாட புத்தகங்கள் பள்ளி சீருடை வழங்கும் விழா

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமா ரெட்டி பாளையத்தில் செயல்பட்டுவரும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இக்கல்வி ஆண்டின் முதல் நாள் மாணவர்களுக்கு தமிழக அரசின் நலத்திட்டங்களான விலையில்லா நோட், பாடபுத்தகங்களும் பள்ளி சீருடையும் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் அவர்களால் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் முகமது அனீஸ் பள்ளியின் தலைமை ஆசிரியை மாலினி கோடீஸ்வரன், 13வது வார்டு உறுப்பினர் கவிதா சங்கர் மற்றும் SMC உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஜே. மில்ட்டன்
திருவள்ளுர்

Related Post