திருமணத்திற்கு பணம் இல்லாத காரணத்தினால் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த இளம்பெண் 22 வயது மித்ரா. சட்டக்கல்லூரி மாணவியான இவர், இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர, அவர்களும் காதலுக்கு சம்மதம் தெரிவித்து, திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமண செலவுக்கு பணம் இல்லாதத்தால் பூர்வீக நிலத்தை விற்கும் நிலைக்கு மித்ராவின் குடும்பத்தினர் தள்ளப்பட்ட்டுள்ளனர். இதனால் மித்ரா தனது திருமணத்திற்காக பூர்வீக நிலத்தை விற்கவேண்டுமா என மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் மிகவும் மனமுடைந்த மித்ரா இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது திருமண செலவுக்கு பணம் இல்லாததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புன்னகை தேசம் செய்திகளுக்காக
திருப்பூர்
வெ. முத்துப்பாண்டி