பொன்னேரி அடுத்த குண்ணமஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (46) இவர் வீட்டில் வளர்த்து வந்த பசு மாட்டை மர்ம நபர்கள் 3 பேர் இரவில் மினி லாரியில் ஏற்றி பொன்னேரி அடுத்த பழவேற்காட்டிற்கு கொண்டு சென்ற போது பொன்னேரி அடுத்த பெரிய காவனம், ரயில்வே கேட்டில் வாகனம் நின்று கொண்டிருந்த போது அருகில் உள்ளவர்கள் பார்த்து மாட்டின் உரிமையாளர் மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து பொன்னேரி காவல் நிலையத்தில் தெரிவித்ததின் பேரில் போலீசார் வாகனத்தை மடக்கி பிடித்து பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி பகுதியை சேர்ந்த காதர் பாஷா (26) பொன்னேரி அடுத்த ஆலாடு பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்பது தெரிய வந்தது பருக்அகமது என்பவர் தப்பி ஓடிய நிலையில் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்

ஜே. மில்ட்டன்
திருவள்ளுர்