சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் உட்பட குடும்பத்தினர் வேறு ஊருக்கு குடிபெயர முயற்சி செய்த நிலையில் 10-ம் வகுப்பு செல்லவிருந்த பள்ளி மாணவன் ஏற்கனவே படித்து வந்த பள்ளியை விட்டு செல்ல மனமில்லாமல் மாணவன் எடுத்த விபரீத முடிவு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த முத்துகண்ணன் என்பவரின் மகன் இஷாந்த் (14) என்ற பள்ளி மாணவன் தற்போது 10-ம் வகுப்புக்கு செல்ல உள்ளார். இந்த நிலையில் தந்தை முத்து கண்ணன் சென்னையில் தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வரும் நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் குடும்பத்தினரோடு சென்னையில் சென்று குடிப்பெயர இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு மாணவன் இஷாந்த் குடும்பத்தினரிடம் ஏற்கனவே படித்து வந்த பள்ளியை விட்டு வர முடியாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று இஷாந்த் கலைக்கொல்லி மருந்தை குடித்து வீட்டின் பின்புறம் மயங்கி கிடந்துள்ளார். தொடர்ந்து மயக்க நிலையில் இருந்த அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திற்கு முன்பு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.