Tue. Jul 1st, 2025

நாசரேத்தில் கொத்தனார் தூக்கிலிட்டு தற்கொலை.

நாசரேத் மில் ரோடு பகுதியில் வசித்து வருபவர் சந்திரன் மகன் அனீஸ். (வயது 32). திருமணம் ஆகாதவர். சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆகும் .

இவர் நாசரேத்தில் உள்ள ஒரு கட்டுமான கம்பெனியில் கொத்தனார் ஆக கடந்த 6 மாதமாக தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். அவருக்கு அடிக்கடி தீராத வயிற்று வலி இருப்பதாக தெரிகிறது.

இதனால் மனம் நொந்து போன அனீஸ் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு தனது லுங்கியால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பெயரில் நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனீஸ் உடலை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

த ஞான் ராஜ் கிறிஸ்டோபர்
புன்னகை தேசம்
நிருபர்
9487445655

Related Post